/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை
பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை
பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை
பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை
ADDED : செப் 10, 2025 08:30 AM
புதுச்சேரி: நீதிமன்ற உத்தரவின்படி, பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என, ஏ.ஐ.டியூ.சி., கோரிக்கை வைத்துள்ளது.
முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யூ.சி., அலுவலத்தில், பொதுச்செயலாளர் சேதுசெல்வம் கூறியதாவது;
பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு 89 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இது தொடர்பாக,தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.இந்த பிரச்னைக்கு நீதி கேட்டு, நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க உத்தரவிட்டது. சம்பளத்தை வழங்காமல், காலம் தாழ்த்தி வந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
நிலுவை சம்பளத்தை வழங்கி ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு, நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதையடுத்து, நேற்று முன்தினம், 1028 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் நிரந்தர ஊழியர்களுக்கு 7 மாத சம்பளம், தின கூலி ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம், வவுச்சர் ஊழியர்களுக்கு 9 மாத சம்பளமாக, 10 கோடியை அரசு வழங்கியதை ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கம் வரவேற்கிறது.
மேலும், மீதமுள்ள நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவத்தார்.