/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அருணாச்சல பிரதேச குழு முதல்வருடன் சந்திப்பு அருணாச்சல பிரதேச குழு முதல்வருடன் சந்திப்பு
அருணாச்சல பிரதேச குழு முதல்வருடன் சந்திப்பு
அருணாச்சல பிரதேச குழு முதல்வருடன் சந்திப்பு
அருணாச்சல பிரதேச குழு முதல்வருடன் சந்திப்பு
ADDED : செப் 10, 2025 08:28 AM

புதுச்சேரி : புதுச்சேரி வந்துள்ள அருணாச்சல பிரதேச சட்டசபை குழுவினர் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அருணாச்சல பிரதேச சட்டசபையின் உறுதிமொழி குழு தலைவர் லைசம் சிமாய், உறுப்பினர் தலிம் தபோ, சட்டசபை செயலக அதிகாரிகள் குழுத் தலைவர் தபாங் தாகு மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று புதுச்சேரி சட்டசபைக்கு வருகை தந்து சபாநாயகர் செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். பின், அருணாச்சல பிரதேச சட்டசபையின் உறுதிமொழி குழுவினர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர்.
முன்னதாக, புதுச்சேரி சட்டசபை உறுதிமொழி குழு தலைவர் பாஸ்கர், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் நாஜீம், கல்யாணசுந்தரம், சம்பத், செந்தில்குமார், லட்சுமிகாந்தன், சிவசங்கர், அரசு செயலர் முத்தம்மா, சட்டசபை செயலர் தயாளன் ஆகியோரையும் சந்தித்து பேசினர்.