/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏனாமில் காஸ் கசிவு 15 பேர் 'அட்மிட்' ஏனாமில் காஸ் கசிவு 15 பேர் 'அட்மிட்'
ஏனாமில் காஸ் கசிவு 15 பேர் 'அட்மிட்'
ஏனாமில் காஸ் கசிவு 15 பேர் 'அட்மிட்'
ஏனாமில் காஸ் கசிவு 15 பேர் 'அட்மிட்'
ADDED : செப் 10, 2025 08:31 AM
புதுச்சேரி : ஏனாம் பிராந்தியத்தில் பொதுப்பணித்துறை குடிநீர் விநியோக மையத்தில் குலோரின் காஸ் கசிவு ஏற்பட்டு, 3 அதிகாரிகள் உட்பட 15 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
புதுச்சேரியின் ஏனம் பிராந்தியம், கனககலா பேட்டில் நேற்று மாலை குடிநீர் விநியோகம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த குளோரின் காஸ் சிலிண்டர் திடீரென கசிந்தது.
இதனால் அங்கு பணியில் இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நாகராஜ், பொட்டு பிரசாத், சந்தோஷ் ஆகியோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் காஸ் கசிவால் அருகில் இருந்த பொது மக்கள் 15க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக ஏனாம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.