/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விஜயை வரவேற்று போஸ்டர் ஒட்டியவர் மீது வழக்கு பதிவு விஜயை வரவேற்று போஸ்டர் ஒட்டியவர் மீது வழக்கு பதிவு
விஜயை வரவேற்று போஸ்டர் ஒட்டியவர் மீது வழக்கு பதிவு
விஜயை வரவேற்று போஸ்டர் ஒட்டியவர் மீது வழக்கு பதிவு
விஜயை வரவேற்று போஸ்டர் ஒட்டியவர் மீது வழக்கு பதிவு
ADDED : செப் 21, 2025 11:13 PM
காரைக்கால்: காரைக்காலில் த.வெ.க., தலைவர் விஜயை வரவேற்று போஸ்டர் ஒட்டிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கரைக்கால் அடுத்த திருப்பட்டினம் கருடப்பாளையம் தெருவை சேர்ந்தவர் விஷ்ணுசரண். கொம்யூன் துப்புரவு மேற்பார்வையாளர். இவர், நேற்று முன்தினம் காந்தி பூங்கா அருகில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது திருப்பட்டினம், அரிசிக்கார தெருவை சேர்ந்த பிரேம்குமார், 34, என்பவர், த.வெ.க., தலைவர் விஜய் நாகைக்கு வருவதையொட்டி, அவரை வரவேற்பு போஸ்டர் ஒட்டினார். அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக அவர் மீது, திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.