/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாஜி அமைச்சரின் மகன் அலுவலகத்தின் பூட்டை உடைத்ததால் பரபரப்பு மாஜி அமைச்சரின் மகன் அலுவலகத்தின் பூட்டை உடைத்ததால் பரபரப்பு
மாஜி அமைச்சரின் மகன் அலுவலகத்தின் பூட்டை உடைத்ததால் பரபரப்பு
மாஜி அமைச்சரின் மகன் அலுவலகத்தின் பூட்டை உடைத்ததால் பரபரப்பு
மாஜி அமைச்சரின் மகன் அலுவலகத்தின் பூட்டை உடைத்ததால் பரபரப்பு
ADDED : செப் 21, 2025 11:14 PM
புதுச்சேரி: முன்னாள் அமைச்சர் கண்ணன் மகன் விக்னேஷ் கண்ணன் ராஜ்பவன் தொகுதி அலுவலகம் செட்டித்தெருவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு இவரது அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த சில முக்கிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை திருடி சென்றுள்ளனர்.
தகவலறிந்த விக்னேஷ் கண்ணன் ஆதரவாளர்கள் பெரியக்கடை போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் அப்பகுதி சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்ததில் , 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், குடிபோதையில் தெரியாமல் அலுவலகத்தின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்ததாகவும், எந்தவித நோக்கமும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, விக்னேஷ் கண்ணன் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்கள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காமல், உடனடியாகவிடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து, போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விக்னேஷ் கண்ணன் கூறுகையில், அரசியல் சார்ந்த கட்சி அலுவலகத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில், சாதாரணமக்களுக்கும், அவர்களின் உடமைகளுக்கும் பாதுகாப்பு என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. ஆகையால், அரசு இதில் மிகவும் கவனம் செலுத்தி, பொது மக்களின் பாதுகாப்பிற்கு எந்த ஒரு குந்தகமும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.