ADDED : செப் 13, 2025 09:08 AM
புதுச்சேரி : ரெட்டியார்பாளையம், கே.எஸ்.எம்., நகரை சேர்ந்தவர் அய்யப்பன், 40. இவரது மனைவி திரிபுரசுந்தரி. அய்யப்பன் இறந்து விட்டதால், திரிபுரசுந்தரி அந்த வீட்டை பூட்டிவிட்டு, பிருந்தாவனத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார்.
அவ்வபோது, ரெட்டியார்பாளையம் வீட்டிற்கு சென்று கவனித்து வந்தார். கடந்த 10ம் தேதி ரெட்டியார்பாளையம் வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் படுகை அறையில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்கள், 15 பட்டு புடவைகள் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தன. புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.