/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடையின் பெயர் பலகையை உடைத்த தமிழ் உரிமை இயக்கத்தினர் மீது வழக்கு கடையின் பெயர் பலகையை உடைத்த தமிழ் உரிமை இயக்கத்தினர் மீது வழக்கு
கடையின் பெயர் பலகையை உடைத்த தமிழ் உரிமை இயக்கத்தினர் மீது வழக்கு
கடையின் பெயர் பலகையை உடைத்த தமிழ் உரிமை இயக்கத்தினர் மீது வழக்கு
கடையின் பெயர் பலகையை உடைத்த தமிழ் உரிமை இயக்கத்தினர் மீது வழக்கு
ADDED : செப் 13, 2025 09:07 AM
புதுச்சேரி : நகரப்பகுதியில் கடைகளின் டிஜிட்டல் பெயர் பலகையை உடைத்து சேதப்படுத்திய தமிழ் உரிமை இயக்கத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கத்தினர் நேற்று முன்தினம் அண்ணா சாலை - நேரு வீதி சந்திப்பில் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி, இயக்கத் தலைவர்கள் பாவாணன், மங்கையர் செல்வம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அவர்கள் காமராஜர் சாலையில் உள்ள கடைகளில் அத்துமீறி நுழைந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் பெயர் பலகையை உருட்டு கட்டையால் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். அதனை தடுக்க முயன்ற கடையின் உரிமையாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து தனியார் நிறுவன மேலாளர் ஆல்பர்ட் அளித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் பாவாணன், மங்கையர்செல்வம் ஆகியோர் மீது 189(2)- சட்ட விரோதமாக கூட்டமாக சேர்ந்து குற்றச் செயலில் ஈடுபடுவது, 329(4) - கடைகளில் அத்து மீறி நுழைத்தல், 324 (4)- 20 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான சொத்தை சேதப்படுத்துதல், 296 (b)- பொது இடத்தில் ஆபாசமான செயலில் ஈடுபடுவது, 351(2)- சமூக ஊடகங்கள் வழியாக அச்சுறுத்தல் செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.