/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதல் தளத்தில் இயங்கும் வங்கி படி ஏறமுடியாமல் தவித்த முதியவர் முதல் தளத்தில் இயங்கும் வங்கி படி ஏறமுடியாமல் தவித்த முதியவர்
முதல் தளத்தில் இயங்கும் வங்கி படி ஏறமுடியாமல் தவித்த முதியவர்
முதல் தளத்தில் இயங்கும் வங்கி படி ஏறமுடியாமல் தவித்த முதியவர்
முதல் தளத்தில் இயங்கும் வங்கி படி ஏறமுடியாமல் தவித்த முதியவர்
ADDED : ஜூன் 13, 2025 03:26 AM

பாகூர்: பாகூரில் முதல் தளத்தில் இயங்கி வரும் வங்கிக்கு பென்ஷன் தொகை எடுக்க படியில் தவழ்ந்து சென்ற முதியவரின் வீடியோ வைரலாகி வருகிறது.
பாகூர், மேற்கு வீதியில் உள்ள ஒரு தனியார் கட்டடத்தின் முதல் தளத்தில்,தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியில் பாகூர், சேலியமேடு, குடியிருப்புபாளையம், பரிக்கல்பட்டு குருவிநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் கணக்கு வைத்துள்ளனர்.
வங்கி முதல் தளத்தில் செயல்படுவதால், வாடிக்கையாளர்கள் படிக்கட்டு ஏறி செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
மாற்றுத்திறாளிகள், இதய பாதிப்பு உள்ளவர்கள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் மாடிப்படிகளில் ஏறி செல்லும் போது, மூச்சி திணறல் ஏற்பட்டு அங்கேயே அமர்ந்து விடுகின்றனர்.
எனவே, இந்த வங்கி கிளையை தரை தளத்திற்கு இடம் மாற்றம் செய்திட வேண்டும் என, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வங்கிக்கு பென்ஷன் தொகை பெறுவதற்காக சென்ற முதியவர் ஒருவர், மாடியில் இருந்து படிக்கப்பட்டு வழியாக கீழே இறங்க முடியாமல், கை தடியுடன் அமர்ந்த படி ஒவ்வொரு படியாக தவழ்ந்து கீழே இறங்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.