/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நவீன இதய அறுவை சிகிச்சை செய்து கே.எம்.ஹார்ட் பவுண்டேஷன் சாதனை நவீன இதய அறுவை சிகிச்சை செய்து கே.எம்.ஹார்ட் பவுண்டேஷன் சாதனை
நவீன இதய அறுவை சிகிச்சை செய்து கே.எம்.ஹார்ட் பவுண்டேஷன் சாதனை
நவீன இதய அறுவை சிகிச்சை செய்து கே.எம்.ஹார்ட் பவுண்டேஷன் சாதனை
நவீன இதய அறுவை சிகிச்சை செய்து கே.எம்.ஹார்ட் பவுண்டேஷன் சாதனை
ADDED : ஜூன் 13, 2025 03:27 AM

புதுச்சேரி: புதுச்சேரி கே.எம்.ஹார்ட் பவுண்டேஷனில் முதன் முறையாக, நோயாளிக்கு, மார்பில், சிறிய தழும்பு ஏற்படுத்தி மருத்துவக் குழுவினர், நவீன இதய அறுவை சிகிச்சை அளித்து சாதனை செய்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் 65வது விவசாயி. இவர், கடந்த 3 ஆண்டுக்கு முன், புதுச்சேரி நெல்லித்தோப்புகே.எம்.,ஹார்ட் பவுண்டேஷனுக்கு மருத்துவ பரிசோதனைக்கு வந்தார். அதில் இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்த குழாய் நடுவே அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர்.
உடன் அவருக்கு ஸ்டெண்ட் வைத்து அனுப்பினர். கடந்த 1 மாதத்திற்கு முன், அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. பரிசோதனை செய்த போது, ஸ்டெண்டு வைத்த இடம் அருகே மற்றொரு இடத்தில் அடைப்பு இருந்ததை கண்டறிந்தனர்.பின், அவருக்கு, இதயஅறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் சுதிர் சீனுவாசன் தலைமையில், மருத்துவர்கள், நவீன தொழில் நுட்ப கருவி மூலம், அறுவை சிகிச்சை செய்தனர்.
இது குறித்து, கே.எம்.,ஹார்ட் பவுண்டேஷன், மருத்துவ கண்காணிப்பாளர் விஜய ஆனந்தகுமார் மற்றும் மருத்துவர் ஓவியா மணிமாறன் ஆகியோர் கூறுகையில்,'இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்ட இடத்தை, மார்பின் இடது பக்க வாட்டு பகுதியில் 5 செ.மீ.,சிறிய அளவிலான தழும்பு ஏற்படுத்தி, மார்பு எலும்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற சிக்கலான அறுவை சிகிச்சை புதுச்சேரியில் முதல் முறையாக எங்கள் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. நோயாளி நல்ல ஆரோக்கியத்துடன், பூரண குணமடைந்து, விரைவில் வீடு திரும்ப உள்ளார்' என்றனர்.