/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அகமதாபத் விமான விபத்து கவர்னர், முதல்வர் இரங்கல் அகமதாபத் விமான விபத்து கவர்னர், முதல்வர் இரங்கல்
அகமதாபத் விமான விபத்து கவர்னர், முதல்வர் இரங்கல்
அகமதாபத் விமான விபத்து கவர்னர், முதல்வர் இரங்கல்
அகமதாபத் விமான விபத்து கவர்னர், முதல்வர் இரங்கல்
ADDED : ஜூன் 13, 2025 03:26 AM
புதுச்சேரி: ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கவர்னர கைலாசநாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தி:
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்டுச் சென்ற, ஏர் இந்தியா பயணிகள் விமானம், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் வருகின்ற செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.