/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரூ.1கோடி செலவில் அனைத்து கிளை நுாலகங்களும் நவீனமாகிறது! இனி 5 லட்சம் டிஜிட்டல் நுால்களை வாசிக்கலாம்ரூ.1கோடி செலவில் அனைத்து கிளை நுாலகங்களும் நவீனமாகிறது! இனி 5 லட்சம் டிஜிட்டல் நுால்களை வாசிக்கலாம்
ரூ.1கோடி செலவில் அனைத்து கிளை நுாலகங்களும் நவீனமாகிறது! இனி 5 லட்சம் டிஜிட்டல் நுால்களை வாசிக்கலாம்
ரூ.1கோடி செலவில் அனைத்து கிளை நுாலகங்களும் நவீனமாகிறது! இனி 5 லட்சம் டிஜிட்டல் நுால்களை வாசிக்கலாம்
ரூ.1கோடி செலவில் அனைத்து கிளை நுாலகங்களும் நவீனமாகிறது! இனி 5 லட்சம் டிஜிட்டல் நுால்களை வாசிக்கலாம்
ADDED : ஜூன் 21, 2024 07:00 AM

புதுச்சேரியில் உள்ள மாவட்ட மைய நுாலகமான ரோமன் ரோலண்ட் நுாலகத்தில் 9 ஆயிரம் சிறுவர்கள் உட்பட, 61 ஆயிரம் போர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நுாலகத்தில் மொத்தம் 4.10 லட்சம் புத்தகங்கள் உள்ளன.
கிளை நுாலகங்கள்
இதுதவிர கிராமப்புற மக்களிடம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவித்திட, 5,000 மக்கள் தொகை உள்ள கிராமங்களில் நுாலகத்தை புதுச்சேரி அரசு அமைத்துள்ளது.
அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தலா ஒரு மாவட்ட மைய நுாலகம், புதுச்சேரியில் 54, காரைக்கால்- 18, மாகி - 4, ஏனாம்- 3 கிளை நுாலகங்கள் என மொத்தம் 81 நுாலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவை, அரசின் கலை, பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வருகின்றன.
இந்த நுாலகங்களில் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். ஒவ்வொரு கிளை நுாலகத்தில் 700 முதல் 1,000 பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர்.
டிஜிட்டல் நுால்கள்
இந்த கிளை நுாலகங்களை 1 கோடி ரூபாய் செலவில் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல கலை பண்பாட்டு துறை திட்டமிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 81 கிளை நுாலகங்களை நவீனமாவதுடன், டிஜிட்டல் நுால்களையும் படிக்கும் வசதியை ஏற்படுத்த கலை பண்பாட்டு துறை திட்டமிட்டு கோப்பு பணிகளை வேகப்படுத்தி வருகின்றது.
தேசிய நுாலக இயக்க திட்டத்தின் கீழ் இந்த டிஜிட்டல் நுால்களை படிக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
இரண்டு கம்ப்யூட்டர்களுடன் அதிவேகமான இண்டர்நெட் இணைப்புடன் டிஜிட்டல் நுால்களை படிக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
இதற்காக ராஜராம் மோகன்ராம் ராய் நுாலக பவுண்டேஷன் கைகோர்த்துள்ளது.
5 லட்சம் டிஜிட்டல் நுால்கள்
ஒவ்வொரு நுாலகங்களிலும் குறைந்தபட்சம் 15 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், நுாலகங்களில் 15க்கும் மேற்பட்ட தினசரி நாளிதழ்கள், 50க்கும் மேற்பட்ட வார மற்றும் மாத இதழ்கள் வாங்கப் படுகின்றன.
டிஜிட்டல் மயமாக்குதல் மூலம் கூடுதலாக 5 லட்சம் டிஜிட்டல் வடிவில் புத்தகங்களை படிக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.
வரபிரசாதம்
ஆழமான பண்பட்ட சிந்தனை கொண்ட, சமூகத்திற்கு நல்ல குடிமகனை உருவாக்குவதற்காக அனைத்து பகுதிகளிலும் நுாலகங்கள் கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் புத்தக வாசிப்பு என்பது இன்றைய மொபைல்போன் தலைமுறை குழந்தைகளுக்கு ஆர்வம் இல்லாததாக மாறிவிட்டது.
குறிப்பாக பொது நுாலகத்திற்கும் பள்ளி மாணவர்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் போய் விட்டது.
இது குழந்தைகளிடம் வாசிப்பு தன்மை மங்க செய்வதுடன், பொது அறிவு தேடலில் பின்தங்க வைக்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் கிளை நுாலகங்களில் டிஜிட்டல் நுால்கள் வாசிப்பு முறையை கலை பண்பாட்டு துறை கொண்டு வர உள்ளது, குழந்தைகளை நுாலகங்கள் பக்கம் மீண்டும் திருப்புவதோடு,ஆராய்ச்சியாளர்களுக்கும் பெரிதும் வரபிரசாதமாக இருக்கும்.