/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நீட் விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானம்: முதல்வரிடம் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மனு நீட் விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானம்: முதல்வரிடம் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மனு
நீட் விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானம்: முதல்வரிடம் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மனு
நீட் விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானம்: முதல்வரிடம் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மனு
நீட் விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானம்: முதல்வரிடம் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மனு
ADDED : ஜூன் 21, 2024 06:59 AM

புதுச்சேரி : நீட் தேர்வுக்கு விளக்கு அளிக்கக் கோரும் தீர்மானத்தை சட்டசபையில் இயற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமியிடம் தி.மு.க.,எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர்.
புதுச்சேரி சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது ஏற்புடையதல்ல.இதனால் தான் புதுச்சேரி சட்டசபையில் நீட் தேர்வில் இருந்து புதுச்சேரிக்கு விலக்கு கோரி தீர்மானம் இயற்ற தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் ஆனால், தங்கள் அரசு அதற்கு முன்வரவில்லை.
ஆனால் தமிழ்நாடு சட்டசபையில்,நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக தற்போது காத்திருக்கிறது.
இதனிடையே நீட் முறைகேடு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வில் தவறு நடந்தால் மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் ஒப்புக்கொள்ள வேண்டும், என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது. மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் 0.001 சதவீதம் யாராவது அலட்சியமாக இருந்தாலும் அதை முழுமையாக ஆராய வேண்டும். ஒரு தனிநபர் ஒட்டுமொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறி இருக்கக்கூடிய சூழலை யோசித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது எனக் கூறியுள்ளது.
எனவே புதுச்சேரி மாநிலத்திற்கு நீட் தேர்வில் இருந்து விளக்கு அளிக்கக் கோரும் தீர்மானத்தை சட்டசபையில் இயற்றி, அதனை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
சந்திப்பின் போது, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத், தலைமைச் செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன்,ராமசாமி, தொகுதி செயலாளர்கள் உடனிருந்தனர்.