Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தோட்டக்கலை கட்டமைப்புகளை உருவாக்க விண்ணப்பம் வரவேற்பு

தோட்டக்கலை கட்டமைப்புகளை உருவாக்க விண்ணப்பம் வரவேற்பு

தோட்டக்கலை கட்டமைப்புகளை உருவாக்க விண்ணப்பம் வரவேற்பு

தோட்டக்கலை கட்டமைப்புகளை உருவாக்க விண்ணப்பம் வரவேற்பு

ADDED : ஜூன் 21, 2024 06:58 AM


Google News
புதுச்சேரி : தோட்டக்கலை பிரிவு கூடுதல் வேளாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை தோட்டக்கலை பிரிவானது,மத்திய அரசின் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலமாக தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில்,மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பினை உருவாக்கிடவும்,அவர்களுடைய வேளாண் சார் வருமானத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக காளான் உற்பத்திக்கூடம் அமைத்தல், காளான் விதை உற்பத்திக்கூடம் அமைத்தல்,பசுமைக்குடில்,நிழல் குடில் அமைத்தல், குறைந்தபட்ச பதப்படுத்தும் அலகு அமைப்பது.குறைந்த ஆற்றல் குளிர் அறை,மண்புழு உர தொட்டி அமைத்தல்,பண்ணை அட்டை அமைத்தல்,பேக் ஹவுஸ் ஆகிய கட்டமைப்புகளை உருவாக்க கடனுடன் பின் மானியம், மூலதன செலவினத்தில் மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விண்ணப்பங்களை தாவரவியல் பூங்காவில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் தோட்டக்கலை அலுவலகம் மூலமாகவோ அல்லது வேளாண் துறையின் hhtps://agri.py.gov.in மூலமாகவோ டவுண்லோடு செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் மாதம் 19ம் தேதிக்குள் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us