/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கள்ளச்சாராயத்தில் சிகிச்சை பெறுவோரின் நிலை தெரியாமல் தவிக்கும் உறவினர்கள்கள்ளச்சாராயத்தில் சிகிச்சை பெறுவோரின் நிலை தெரியாமல் தவிக்கும் உறவினர்கள்
கள்ளச்சாராயத்தில் சிகிச்சை பெறுவோரின் நிலை தெரியாமல் தவிக்கும் உறவினர்கள்
கள்ளச்சாராயத்தில் சிகிச்சை பெறுவோரின் நிலை தெரியாமல் தவிக்கும் உறவினர்கள்
கள்ளச்சாராயத்தில் சிகிச்சை பெறுவோரின் நிலை தெரியாமல் தவிக்கும் உறவினர்கள்
ADDED : ஜூன் 21, 2024 01:47 PM

புதுச்சேரி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட சிலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், சிகிச்சை பெற்று வருவோரின் உறவினர்கள் கூறுகையில், ''ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு நேராக மருத்துவமனை வந்துவிட்டோம். 4 நாட்களாக ஒரே உடையுடன் இங்கேயே இருக்கிறோம். எங்களிடம் பணமும் இல்லை. ஆனால், சிகிச்சைக்கான பொருட்களை வாங்கிவர சொல்லி மருத்துவர்கள் கூறுகின்றனர். பணமே இல்லாமல், நாங்கள் எப்படி வாங்குவது? அதேபோல், சிகிச்சையில் உள்ளவர்களை வெளியில் இருந்துதான் எட்டி பார்க்கிறோம்; அருகில் அனுமதிப்பதில்லை. அவர்களும் எந்தவித அசைவும் இல்லாமல் இருக்கின்றனர். என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தவிக்கிறோம்'' என்றனர்.