/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சித்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை சித்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
சித்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
சித்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
சித்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : ஜூலை 21, 2024 06:06 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை சித்தி விநாயகர் கோவிலில் 41ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை முத்தையா முதலியார் வீதியில் சுந்தர விநாயகர், சுப்ரமணிய சுவாமி, சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு 41ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நேற்று மாலை 5:00 மணிக்கு நடந்தது.
திரளான பெண்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக, சுந்தர விநாயகர், சுப்ரமணிய சுவாமி, சித்தி விநாயகர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.