/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கம்பளி சாமி மடத்தில் ஏகதின லட்சார்ச்சனை கம்பளி சாமி மடத்தில் ஏகதின லட்சார்ச்சனை
கம்பளி சாமி மடத்தில் ஏகதின லட்சார்ச்சனை
கம்பளி சாமி மடத்தில் ஏகதின லட்சார்ச்சனை
கம்பளி சாமி மடத்தில் ஏகதின லட்சார்ச்சனை
ADDED : ஜூலை 21, 2024 06:05 AM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி கம்பளிசாமி மடத்தில் வெண்ணெய் வேலவர் ஆன்மீக நற்பணி மன்றம் சார்பில் வியாச குருபூர்ணிமா முன்னிட்டு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.
மடத்தின் மடாதிபதி ஆனந்தபாலயோகி பவனானி தலைமை தாங்கினார். காலை 9:30 மணி முதல் 11:00 மணிரை முதல்கால பூஜை, காலை 11:30 மணி முதல் 1:00 மணி வரை இரண்டாம் கால பூஜை, மதியம் 2:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை மூன்றாம் கால பூஜை, மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை நான்காம் கால பூஜை நடந்தது.
நான்கு கால பூஜையின் போது, சிவ சகஸ்ரநாம அர்ச்சனை, தேவாரம் திருப்புகழ் ஓதுதல் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நற்பணி மன்ற நிறுவனர் முருகபாபுஜி, சண்முகம், கஜேந்திரன், தேவசேனா பவனானி, லலிதா, செல்வகுமார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.