ADDED : ஜூன் 18, 2024 04:54 AM
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் திரவுபதியம்மன் கோவில் திரவுபதி-அர்ஜூணன் திருக்கல்யாணம் உற்சவம் நாளை நடக்கிறது.
நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 13ம் தேதி துவங்கியது.
அன்று முதல் தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.
நாளை இரவு 7.30 மணிக்கு திரவுபதியம்மன் திருக்கல்யாணம் உற்சவமும், 20ம் தேதி இரவு 7.00 மணிக்கு சக்தி கரகம் புறப்பாடும், 21ம் தேதி மதியம் 12.00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை சொரப்பூர் கிராம மக்கள் செய்துள்ளனர்.