Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காது பரிசோதனை மருத்துவ முகாம்

காது பரிசோதனை மருத்துவ முகாம்

காது பரிசோதனை மருத்துவ முகாம்

காது பரிசோதனை மருத்துவ முகாம்

ADDED : ஜூன் 18, 2024 04:53 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: கியூர் காது கருவிகள் மற்றும் பேச்சு பயிற்சி கிளினிக் சார்பில் இலவச பேச்சு மற்றும் காது பரிசோதனை மருத்துவ முகாம் நடந்தது.

வில்லியனுார் மெயின்ரோடு விவேகானந்தா நகரில் உள்ள மூகாம்பிகா இணை மருத்துவ அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நடந்த மருத்துவ முகாமில், பேச்சு மொழி மற்றும் கேட்பியல் நிபுணர் டாக்டர் முத்துக்குமரன் பங்கேற்று பரிசோதனைகள் செய்து ஆலோசனைகள் வழங்கினார்.

முகாமில், காது கேளாமை, காது பரிசோதனை, குரல் மாற்றுக்குறைபாடுகள், திக்குவாய் குறைபாடுகள், உச்சரிப்பு குறைபாடுகள், மூளை வளர்ச்சி குறைபாடு, மூளை முடக்குவாதம், பக்கவாத நிலை பேச்சு குறைபாடு, படிப்பில் பின்தங்கியோர், ஆட்டிசம், கவனக்குறைபாடு, ஓய்வுற்ற தன்மை, உள் அன்னம், உதடு பிளவு, மாறுப்பட்ட குணாதியசங்களுக்கு அதிநவீன பரிசோதனைகள் மற்றும் சிறப்பு ஆலோசனை இலவமாக வழங்கப்பட்டது.

இதுபோல் அடுத்த இலவச பரிசோதனை மருத்துவ முகாம் கண்டறிய www.puduvaiqure.com இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us