/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இந்திராணி செவிலியர் கல்லுாரியில் ரத்ததான விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்திராணி செவிலியர் கல்லுாரியில் ரத்ததான விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்திராணி செவிலியர் கல்லுாரியில் ரத்ததான விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்திராணி செவிலியர் கல்லுாரியில் ரத்ததான விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்திராணி செவிலியர் கல்லுாரியில் ரத்ததான விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 18, 2024 04:52 AM

வில்லியனுார்: இந்திராணி செவிலியர் கல்லுாரியில் உலக ரத்ததான விழிப்புணர்வு தினம் கொண்டாடினர்.
உலக ரத்த தானம் செய்பவர்கள் தினத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
உயிர்துளி அறக்கட்டளை மற்றும் சிவப்பு ரிப்பன் கிளப் ஆகியவை இணைந்து 20வது வருட ரத்த தானம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் டாக்டர் மல்லிகா கண்ணன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் டாக்டர் ராஜேஸ்வரி வரவேற்றார். உயிர்துளி அறக்கட்டளை செயலாளர் சிவக்குமார் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பி.பார்ம் கல்லுாரி பேராசிரியர்கள் கரோலின் கிரேஸ், கயல்விழி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் பிரியா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பி.பார்ம் முதலாம் ஆண்டு மாணவர்கள் கலந்துகொணடனர். பேராசிரியர் ஜமுனாராணி நன்றி கூறினார்.