/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காதலியை பார்த்துவிட்டு வரும்போது விபத்தில் சிக்கி காதலன் பலி காதலியை பார்த்துவிட்டு வரும்போது விபத்தில் சிக்கி காதலன் பலி
காதலியை பார்த்துவிட்டு வரும்போது விபத்தில் சிக்கி காதலன் பலி
காதலியை பார்த்துவிட்டு வரும்போது விபத்தில் சிக்கி காதலன் பலி
காதலியை பார்த்துவிட்டு வரும்போது விபத்தில் சிக்கி காதலன் பலி
ADDED : ஜூன் 18, 2024 04:51 AM
காரைக்கால்: சென்னையில் காதலியை பார்த்து விட்டு பைக்கில் வந்த காதலன் தூக்கத்தில் சாலையில் நின்ற வாகனத்தின் மீது மோதி உயிரிழந்தார் .
நாகப்பட்டினம் மாவட்ட மஞ்சக்கொல்லை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஞானசேகர் மகன் ஞானபிரகாஷ், 22; பைக் மெக்கானிக்.
இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ஜெயகுமார் மகன் மதன், 22 ;இவர் ஐ.டி.ஐ., முடிந்துவிட்டு டைல்ஸ் வேலைக்கு சென்று வருகிறார்.
ஞானபிரகாஷ் மற்றும் மதன் இருவரும் கடந்த 15ம் தேதி இரவு சென்னையில் உள்ள மதனின் காதலியை பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்னையில் இருந்து புறப்பட்டனர்.
இரவு நேரம் என்பதால் ஞானபிரகாஷ் மற்றும் மதனும் பைக் ஒருவர் மாற்றி ஒருவர் ஓட்டி வந்தனர்.
தரங்கம்பாடியில் டீ குடித்துவிட்டு பைக்கை மதன் ஓட்டிவரும் போது நேற்று அதிகாலை காரைக்கால் பாரதியார் சாலை கீழக்காசாக்குடி பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்த வாகனத்தின் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த இருவரையும் அரசு மருந்துவமனையில் சேர்த்தனர். இதில் மதன் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஞானபிரகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில் நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.