/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தற்காலிக பஸ் நிலையத்தில் புழுதி பறப்பதால் மக்கள் அவதி தற்காலிக பஸ் நிலையத்தில் புழுதி பறப்பதால் மக்கள் அவதி
தற்காலிக பஸ் நிலையத்தில் புழுதி பறப்பதால் மக்கள் அவதி
தற்காலிக பஸ் நிலையத்தில் புழுதி பறப்பதால் மக்கள் அவதி
தற்காலிக பஸ் நிலையத்தில் புழுதி பறப்பதால் மக்கள் அவதி
ADDED : ஜூன் 18, 2024 04:51 AM
புதுச்சேரி: தற்காலிகமாக உள்ள பஸ் நிலையத்தில் புழுதி பறப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 31 கோடி ரூபாய் மதிப்பீல் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணியால் பஸ்கள் நிறுத்துவதற்கு இடையூறாக இருந்தது. அதையடுத்து, தற்காலிகமாக ஏ.எப்.டி., மைதானத்திற்கு மாற்ற அரசு முடிவு செய்தது.
அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் பஸ் நிலையம் ஏ.எப்.டி., மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. பஸ் ஏறும் பயணிகளுக்கு போதிய வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், பஸ் வரும் போது, அந்த பகுதியில் புழுதியுடன் மண் பறப்பதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மழை பெய்தால், பஸ் நிற்கும் மைதானம் சேறும், சகதியுமாக மாற வாய்ப்புள்ளது. அதற்குள் அந்த இடத்தில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.