/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பரோலில் வெளியே வந்து எஸ்கேப் ஆன ரவுடி தேடப்படும் நபராக அறிவித்தது போலீஸ் பரோலில் வெளியே வந்து எஸ்கேப் ஆன ரவுடி தேடப்படும் நபராக அறிவித்தது போலீஸ்
பரோலில் வெளியே வந்து எஸ்கேப் ஆன ரவுடி தேடப்படும் நபராக அறிவித்தது போலீஸ்
பரோலில் வெளியே வந்து எஸ்கேப் ஆன ரவுடி தேடப்படும் நபராக அறிவித்தது போலீஸ்
பரோலில் வெளியே வந்து எஸ்கேப் ஆன ரவுடி தேடப்படும் நபராக அறிவித்தது போலீஸ்
ADDED : ஜூன் 18, 2024 04:50 AM
புதுச்சேரி: பரோலில் வந்து குடும்பத்துடன் எஸ்கேப் ஆன ரவுடி கருணா தேடப்படும் நபராக அறிவித்து போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்தவர் ரவுடி கருணா (எ) மனோகரன். உருளையன்பேட்டையில் நடந்த கொலை வழக்கில், கடந்த 1998ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 14 ஆண்டிற்கு மேல் சிறையில் உள்ள தன்னை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய முறையிட்டார். உள்துறை நிராகரித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 11ம் தேதி தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என கூறி பரோலில் வந்த கருணா, 13ம் தேதி சிறைக்கு திரும்பவில்லை. அவரது வீடும் பூட்டப்பட்டு, குடும்பத்தினரும் மாயமாகி இருந்தனர். சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அளித்த புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் கருணா மற்றும் அவரது குடும்பத்தினரின் மொபைல்போன் டவர் சிக்னல் திருப்பதி வரை சென்று கட் ஆகி இருப்பது தெரியவந்தது. போலீசார் திருப்பதி சென்று விசாரித்தபோது, கருணா குடும்பத்தினர் திருப்பதிக்கு செல்லவில்லை என தெரியவந்தது.
தீவிர விசாரணையில், கடந்த பல மாதத்திற்கு முன்பே தனது சொத்துக்கள் பலவற்றை கருணா விற்பனை செய்துள்ளார். பரோலில் வெளியே வந்த பின்பு சில பிரமுகர்களை சந்தித்த கருணா, அதன்பின்பு குடும்பத்துடன் எஸ்கேப் ஆகியது தெரியவந்தது.
இந்த நிலையில், ரவுடி கருணா தேடப்படும் நபராக அறிவித்த முதலியார்பட்டை போலீசார், கருணாவின் புகைப்படத்துடன் கூடிய நோட்டீஸ் புதுச்சேரி மற்றும் தமிழக போலீஸ் நிலையங்களுக்கு அனுப்யுள்ளது.