Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரைக்காலில் டிரைவரிடம் போலீசார் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல் அபராதத்திற்கு ரசீது கொடுத்து பணம் பெற்றதாக போலீஸ் விளக்கம்

காரைக்காலில் டிரைவரிடம் போலீசார் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல் அபராதத்திற்கு ரசீது கொடுத்து பணம் பெற்றதாக போலீஸ் விளக்கம்

காரைக்காலில் டிரைவரிடம் போலீசார் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல் அபராதத்திற்கு ரசீது கொடுத்து பணம் பெற்றதாக போலீஸ் விளக்கம்

காரைக்காலில் டிரைவரிடம் போலீசார் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல் அபராதத்திற்கு ரசீது கொடுத்து பணம் பெற்றதாக போலீஸ் விளக்கம்

ADDED : ஜூன் 18, 2024 04:55 AM


Google News
Latest Tamil News
காரைக்கால்: காரைக்கால் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்கியதாக சுற்றுலாப்பயணிகள் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பரப்பிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வாகனம் மற்றும் கனரகவாகனங்கள் இயக்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் காரைக்கால் -நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை அம்மாள்சத்திரம் பகுதி திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது சுற்றுலாப்பயணி வந்த வாகனத்தை போலீசார் நிறுத்தி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் சுற்றுலாப் பயணி வந்தவாகனத்தின் டிரைவர் சீருடையில் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.

இதற்காக சுற்றுலாப்பயணிகள் வந்த வாகனத்தின் டிரைவர் கையில் பணம் எடுத்து போலீசாரிடம் கொடுப்பதை அந்த வேனில் வந்த பயணி ஒருவர் தனது மொபைலில் படம் பிடித்து சமூக வலை தளத்தில் பதிவிட்டது தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்களில் விசாரித்த போது சுற்றுலா வாகனத்தின் ஓட்டுனர் சீருடையில் இல்லாமல் போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்கிய குற்றத்திற்காக ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரசீதும் ஓட்டுநரிடம் வழங்கப்பட்டது.

இதை சுற்றுலா பயணி ஒருவர் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவது போல் சித்தரித்து வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.

எனவே போக்குவரத்து போலீசார் மீது தவறான நோக்கத்தை ஏற்படுத்தவும், பணி செய்யவிடாமல் தடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் விளக்கமளித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us