/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆற்றில் மணல் அள்ள சொல்லு... இன்ஸ்பெக்டர் 'பளீச்' பகீர் வீடியோ வைரல்(tag) ஆற்றில் மணல் அள்ள சொல்லு... இன்ஸ்பெக்டர் 'பளீச்' பகீர் வீடியோ வைரல்(tag)
ஆற்றில் மணல் அள்ள சொல்லு... இன்ஸ்பெக்டர் 'பளீச்' பகீர் வீடியோ வைரல்(tag)
ஆற்றில் மணல் அள்ள சொல்லு... இன்ஸ்பெக்டர் 'பளீச்' பகீர் வீடியோ வைரல்(tag)
ஆற்றில் மணல் அள்ள சொல்லு... இன்ஸ்பெக்டர் 'பளீச்' பகீர் வீடியோ வைரல்(tag)
ADDED : ஜூலை 14, 2024 05:54 AM
புதுச்சேரியில் ஆற்று மணல் அள்ளுவதற்கு தடை உள்ளது. ஆனால், தடையை மீறி சங்கராபரணி ஆற்றங்கரை பகுதியில் இரவு பகலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது.
மணல் அள்ளிச் செல்லும் புள்ளிகள், அந்தந்த பகுதி போலீஸ் நிலைய அதிகாரிகளை மாதக்கணக்கிலும், ரோந்து செல்லும் போலீசாரை தினசரி அடிப்படையிலும் 'மாமூலாக' கவனித்து கொள்கின்றனர். இதனால், மணல் அள்ளுவதை போலீசார் கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில், எல்லையோர பகுதியில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஒருவரும், மணல் அள்ளும் நபரும் பேசிக் கொள்ளும் உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் இடம் பெற்றுள்ள உரையாடல் விபரம் இதோ...
மணல் அள்ளும் நபர்: நைட் பீட் யாரு அண்ணா?
இன்ஸ்பெக்டர்: நைட் பீட் அய்யனாரு... ஏன்டா?
மணல் அள்ளும் நபர்: அவரு (அய்யனார்) இங்கு வந்தாரு... ஏன் இங்கு நிற்கின்றீர்கள்? என கேட்டு துரத்தி விட்டார். பசங்கள் எல்லாம் ஓடிட்டாங்க...
இன்ஸ்பெக்டர்: ஏய்... போய் அடிக்க சொல்லுடா. அவன் வந்தா என்ன? போய் மண் அள்ள சொல்லுடா...
மணல் அள்ளும் நபர்: பசங்க பயப்படுகின்றனர்.
இன்ஸ்பெக்டர்: வெளிப்படையாக உட்கார்ந்திருந்தார்களா? நீ போய் ஏற்ற சொல்லு... நான் அங்க தான் இருக்கிறேன்... என ஆடியோ முடிகிறது.
இது, போலீஸ் வட்டாரத்தில் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.