/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஊருக்குள் கஞ்சா விற்றால் கடும் நடவடிக்கை வீராம்பட்டினம் பஞ்சாயத்துக்கு 'சபாஷ்' ஊருக்குள் கஞ்சா விற்றால் கடும் நடவடிக்கை வீராம்பட்டினம் பஞ்சாயத்துக்கு 'சபாஷ்'
ஊருக்குள் கஞ்சா விற்றால் கடும் நடவடிக்கை வீராம்பட்டினம் பஞ்சாயத்துக்கு 'சபாஷ்'
ஊருக்குள் கஞ்சா விற்றால் கடும் நடவடிக்கை வீராம்பட்டினம் பஞ்சாயத்துக்கு 'சபாஷ்'
ஊருக்குள் கஞ்சா விற்றால் கடும் நடவடிக்கை வீராம்பட்டினம் பஞ்சாயத்துக்கு 'சபாஷ்'
ADDED : ஜூலை 14, 2024 05:54 AM
புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சாவை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்தாலும், கஞ்சா புதிய புதிய அவதாரம் எடுத்து வருகிறது.
அதாவது, கஞ்சா ஸ்டாம்ப், கஞ்சா மாத்திரை, கஞ்சா ஆயில், கஞ்சா சாக்லெட் என வரிசை கட்டி விற்கப்படுவது போலீசாருக்கு பெரும் தலைவலியை உண்டாக்கி இருக்கிறது.
கஞ்சா போதையில் இருந்து இளைஞர்களை மீட்பதற்கு போலீசார் ஆங்காங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். புதுச்சேரிக்கு கஞ்சா வரும் வழிகளையும் தேடி அலைந்து வருகின்றனர்.
இதுதவிர, சட்டம் ஒழுங்கு போலீசார், கஞ்சா விற்பனையை தடுக்க தனிக்குழுக்களை அமைத்து ரகசிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வீராம்பட் டினம் கிராமத்தில் கஞ்சா பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்து குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டாலோ அவர்களை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைப்பது என ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுசம்பந்தமாக, கடந்த வாரம் கிராமம் முழுதும் தண்டோரா போட்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. கஞ்சா வழக்கில் சிக்கியவர்களுக்கு துணை போனால், அவர்கள் மீதும் கிராம பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்கும் எனவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இந்த தீர்மானம் ஒலி பெருக்கி மூலமாக ஊர் முழுக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்தார் கூறுகையில், 'கஞ்சா போதை பொருட்கள் நடமாட்டத்தை போலீஸ், அரசு மட்டும் ஒழித்து விட முடியாது. பொதுமக்களாகிய நாமும் அதற்கு துணை இருக்க வேண்டும். வீராம்பட்டினம் கிராமத்தில் கஞ்சா பயன்படுத்தினால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என கூறினர்.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க வீராம்பட்டினம் கிராமம் எடுத்துள்ள அதிரடி முடிவு, மற்ற அனைத்து கிராமங்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.