ADDED : ஜூலை 14, 2024 05:55 AM
விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, புதுச்சேரி கலால் துறை மூலம் கடந்த 8, 9, 10 மற்றும் ஓட்டு எண்ணிக்கை தினமான 13ம் தேதிகளில் திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து கிராமங்களில் மதுக்கடைகள், ரெஸ்டோபார்கள், சாராயக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது.
ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்ததையொட்டி, திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மதுபான கடைகள், ரெஸ்டோ பார்கள் மூடப்பட்டன. ஆனால், குடிமகன்களுக்கு மதுபானங்கள், சாராயம் வழக்கத்தை விட கள்ளத்தனமாக அதிகமாக கிடைத்தது. குடிமகன்கள் போதையில் ரகளையில் ஈடுபட்டனர்.