/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேசிய டென்னிஸ் போட்டி தமிழக வீரர்கள் வெற்றி தேசிய டென்னிஸ் போட்டி தமிழக வீரர்கள் வெற்றி
தேசிய டென்னிஸ் போட்டி தமிழக வீரர்கள் வெற்றி
தேசிய டென்னிஸ் போட்டி தமிழக வீரர்கள் வெற்றி
தேசிய டென்னிஸ் போட்டி தமிழக வீரர்கள் வெற்றி
ADDED : ஜூன் 01, 2024 06:08 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியில், பெண்கள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சுஹானி முதலிடம் பிடித்தார்.
புதுச்சேரி மாநில டென்னிஸ் சங்கம் சார்பில், தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி இந்திராகாந்தி மைதானத்தில் கடந்த மே 26ம் தேதி துவங்கியது.
இதில், 16 வயதிற்கு உட்பட்ட பிரிவில் போட்டிகள் நடந்தன.
போட்டியில், புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த, 100 பேர் பங்கேற்றனர்.
ஆண்கள் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த சம்பத் சஞ்சய் முதலிடம், மிதில் இரண்டாம் இடமும் பிடித்தனர். பெண்கள் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த சுஹானி முதலிடம், தானுஸ்ரீ இரண்டாம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன.