/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் 103.5 டிகிரி வெயில் புதுச்சேரியில் 103.5 டிகிரி வெயில்
புதுச்சேரியில் 103.5 டிகிரி வெயில்
புதுச்சேரியில் 103.5 டிகிரி வெயில்
புதுச்சேரியில் 103.5 டிகிரி வெயில்
ADDED : ஜூன் 01, 2024 06:07 AM

புதுச்சேரி, : புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று, 103.5 டிகிரி வெயில் பதிவானது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில், 100 டிகிரி வரை வெயில் அடித்தது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றுழுத்த தாழ்வு நிலை காரணமாக, இரு வாரங்களுக்கு முன், பெய்த லேசான மழை காரணமாக புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.
ஆனால், கடந்த சில தினங்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகமானது.
கடந்த, 28ம் தேதி - 101.1 டிகிரி, 29ம் தேதி - 102.6, நேற்று முன்தினம் 30ம் தேதி 104 டிகிரி வரை வெயில் பதிவானது. இதனால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் வெளுத்து வாங்குகிறது.
நேற்று 103.5 டிகிரி வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.