ADDED : ஜூன் 16, 2024 11:54 PM

புதுச்சேரி,: திம்ம நாயக்கன்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவ - மாணவியருக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், சபாநாயகர் செல்வம் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்கி பேசினார்.
முதன்மைக் கல்வி அதிகாரி மோகன் முன்னிலை வகித்தார். பொறுப்பாசிரியர் ஞானசம்மந்தம் மற்றும் ஆசிரியர்கள், விழா ஏற்பாடுகளை செய்தனர்.