/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நகை வாங்கி தராததால் தகராறு; தீக்குளித்து மனைவி தற்கொலை நகை வாங்கி தராததால் தகராறு; தீக்குளித்து மனைவி தற்கொலை
நகை வாங்கி தராததால் தகராறு; தீக்குளித்து மனைவி தற்கொலை
நகை வாங்கி தராததால் தகராறு; தீக்குளித்து மனைவி தற்கொலை
நகை வாங்கி தராததால் தகராறு; தீக்குளித்து மனைவி தற்கொலை
ADDED : ஜூன் 16, 2024 11:54 PM
புதுச்சேரி, : பிள்ளைச்சாவடியில் மகளுக்கு நகை வாங்கி தராததால் கணவருடன் ஏற்பட்ட தகராறில், மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம், சின்ன நெற்குணம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கவிதா, 28; பி.இ. பட்டதாரி. இவருக்கும், பிள்ளைச்சாவடி பெருமாள் மகன் சதீஷ்குமாருக்கும், கடந்த 2021ம் ஆண்டு செப்.,ல் திருமணம் நடந்தது.
சதிஷ்குமார் பெயிண்டில் கலக்கும் தின்னர் வியாபாரம் செய்து வருகிறார். தம்பதிக்கு 2 வயது மகனும், 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டது.
இதனையடுத்து ஜாதகத்தில் தோஷம் கழிக்க வீட்டில் வழிபாடு நடத்தினர். கடந்த 14ம் தேதி கவிதாவுக்கு 1.5 சவரன் தங்க கம்மல் வாங்கி வந்து சாமி அறையில் வைத்து பூஜை செய்தனர்.
அப்போது, தனது மகளுக்கு ஏன் நகை வாங்கி தரவில்லை என, கவிதா கேட்டார். அதற்கு பிறகு வாங்கி தருகிறேன் என சதீஷ்குமார் கூறினார்.
இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. திடீரென தின்னரை எடுத்து எனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டு இறந்து விடுவேன் என, கவிதா விளையாட்டாக மிரட்டினார். சதீஷ்குமார் இதனை பொறுப்படுத்தாமல் கழிவறைக்கு சென்றார்.
அடுத்த நொடி கவிதா தனது உடலில் தின்னர் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடலில் தீ பற்றி அலறிய கவிதா மீது சதீஷ்குமார் தண்ணீர் ஊற்றி அணைத்தார்.
ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட கவிதா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
திருமணமான 3 ஆண்டுகளில் அவர், தீக்குளித்து இறந்ததால், தாசில்தார் விசாரணை நடந்து வருகிறது.