ADDED : ஜூன் 17, 2024 12:40 AM

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை மற்றும் விநாயகா மிஷன் மருத்துவக்கல்லுாரி சங்கம் இணைந்து உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு சிறப்பு முகாமை நடத்தின.
விநாயகா மிஷன் மருத்துவக் கல்லுாரி டீன் குணசேகரன் ரத்த தான முகாமை துவக்கி வைத்து, ரத்த தானத்தின் சிறப்பு குறித்து விளக்கினார். இந்திய கடலோர காவல்படை அதிகாரி கமாண்டர் விஜய் விஸ்வநாதன் முன்னிலை வகித்து பேசுகையில், 'இந்திய கடலோர காவல்படையின் பெரும் முயற்சியில் ரத்ததான முகாம் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் சமூக பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.
முகாமில், கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் மருத்துவக்கல்லுாரி டாக்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.