/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலவச பஸ் சேவை கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் இலவச பஸ் சேவை கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
இலவச பஸ் சேவை கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
இலவச பஸ் சேவை கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
இலவச பஸ் சேவை கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 14, 2025 04:37 AM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள், இலவச பஸ் சேவையை துவங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்திற்கு 5 வழித்தடங்களில் 11 பஸ்கள் இலவசமாக இயக்கப்பட்டு வந்தது. இதனால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயனடைந்தனர். இந்நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் புதுச்சேரி மாணவர்களுக்கு இயக்கி வந்த பஸ் சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் கடந்த 2019ல் அறிவித்தது.
அப்போது மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக அறிவிப்பை திரும்ப பெற்றது. கொரோனாவால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டது. மீண்டும் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்ட போது பஸ் சேவையை மீண்டும் துவங்கமால் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரி மாணவர்களை வஞ்சித்து வருகிறது.
இதனை கண்டித்து, மீண்டும் இலவச பஸ் சேவையை துவக்க வலியுறுத்தி புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவை சார்பில் நேற்று மாலை 4:00 மணியளவில் பல்கலைக்கழகம் முன், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர் பேரவை தலைவர் காயத்திரி தலைமை தாங்கினார். செயலாளர் அபூர்வா முன்னிலை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் சஜிதா, அய்ஜாஸ், அஸ்வினி, ஜெரோம் உள்ளிட்ட மாணவர் பேரவை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.