ADDED : மார் 14, 2025 04:40 AM
புதுச்சேரி: வங்கியில் லேப்டாப் திருடியவருக்கு, சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
முதலியார்பேட்டையில் உள்ள தேசியமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி நள்ளிரவு லேப்டாப் திருடு போனது.
இதுகுறித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி, திருடுபோன லேப்டாப்பை, விழுப்புரத்தில் மீட்டனர்.
லேப்டாப் திருடிய, வேறு ஒரு வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த கிருஷ்ணா,24; என்பவரை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்து, அவர் மீது புதுச்சேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, லேப்டாப் திருடிய கிருஷ்ணாவுக்கு 38 நாள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.