/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியார் பஸ்கள் மோதி விபத்து பயணிகள் காயமின்றி தப்பினர் தனியார் பஸ்கள் மோதி விபத்து பயணிகள் காயமின்றி தப்பினர்
தனியார் பஸ்கள் மோதி விபத்து பயணிகள் காயமின்றி தப்பினர்
தனியார் பஸ்கள் மோதி விபத்து பயணிகள் காயமின்றி தப்பினர்
தனியார் பஸ்கள் மோதி விபத்து பயணிகள் காயமின்றி தப்பினர்
ADDED : மார் 14, 2025 04:36 AM
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே தனியார் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், பயணிகள் அதிஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
கன்னியக்கோவிலில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கந்தன்பேட் சந்திப்பு அருகே சென்ற போது, கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற மற்றொறு தனியார் பஸ், முன்னால் சென்ற பஸ்சை முந்தி செல்ல முயன்றது.
அப்போது, எதிர்பாராத விதமாக, பஸ்சின் பின் புறத்தில் பலமாக மோதியது. இந்த விபத்தில், ஒரு பஸ்சின் பின்புற கண்ணாடியும், மற்றொரு பஸ்சிற்கு முன்புற கண்ணாடியும் உடைந்து விழுந்தன. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிஷ்டவசமாக காயமின்றி தப்பினர். தகவலறிந்த கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.