/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திறன் மற்றும் தொழில் முனைவு மேம்பாட்டு கருத்தரங்கம் திறன் மற்றும் தொழில் முனைவு மேம்பாட்டு கருத்தரங்கம்
திறன் மற்றும் தொழில் முனைவு மேம்பாட்டு கருத்தரங்கம்
திறன் மற்றும் தொழில் முனைவு மேம்பாட்டு கருத்தரங்கம்
திறன் மற்றும் தொழில் முனைவு மேம்பாட்டு கருத்தரங்கம்
ADDED : ஜூலை 10, 2024 04:24 AM

புதுச்சேரி : கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் 'திறன் மற்றும் தொழில் முனைவு மேம்பாட்டில் இளைஞர்களின் பங்கு' என்ற தலைப்பில்கருத்தரங்கம் நடந்தது.
டில்லி விஸ்வ யுவக்கேந்த்ரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கிராமப்புற கல்வி மற்றும் மேம்பாட்டு சங்கம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், செயலாளர்டாக்டர்நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். மின்னணுவியல் துறை மாணவி கவுஷிகா வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் மலர்க்கண், வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ஜெயக்குமார் கருத்துரை வழங்கினர். மேலாளர் சீனுவாசன் துவக்க உரையாற்றினார். ரீட்ஸ் என்.ஜி.ஓ., தலைமை நிர்வாக அதிகாரி தாரணி முரளிதரன் அறிமுக உரையாற்றினார். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் தொழில் முனைவோர் மனப்பான்மையின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
கருத்தரங்கில், தலைமை விருந்தினர் விஸ்வ யுவக் கேந்த்ரா திட்ட அதிகாரி ரஜத் தாமஸ், வீட்சைன்பாட்ஸ் நிறுவனர் நவீன் ஆகாஷ் சபாபதி, அனோவா கார்பரேட் சர்வீஸ் நிறுவனர் சந்திரசேகர் குப்பேரி, குவி கீக் நெட்ஒர்க் நிறுவன இணை நிறுவனர் பாலமுருகன், கேண்டீ பாக்டரி நிறுவனர் ஸ்ரீமதி அனுஷா மகேஷ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் திறன் மேம்பாடு குறித்து பேசினர்.
கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஸ்ரீதரன் முரளிதரன் நன்றி கூறினார்.