/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி மாணவர்களை கொண்டு செவிலியர் பணி நிரப்ப கோரிக்கை புதுச்சேரி மாணவர்களை கொண்டு செவிலியர் பணி நிரப்ப கோரிக்கை
புதுச்சேரி மாணவர்களை கொண்டு செவிலியர் பணி நிரப்ப கோரிக்கை
புதுச்சேரி மாணவர்களை கொண்டு செவிலியர் பணி நிரப்ப கோரிக்கை
புதுச்சேரி மாணவர்களை கொண்டு செவிலியர் பணி நிரப்ப கோரிக்கை
ADDED : ஜூலை 10, 2024 04:25 AM
புதுச்சேரி, : அரசு மருத்துவக் கல்லுாரியில் செவிலியர் பணியிடங்களை புதுச்சேரி மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் நல சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் அறிக்கை:
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் 225 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில், கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசு அறிவித்தபடி முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அதேபோல், செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவரும் புதுச்சேரி மாநிலத்தை நிரந்தர இருப்பிடமாக கொண்டு பி.எஸ்சி., நர்சிங் மற்றும் டிப்ளமோ நர்சிங் படித்து இருக்க வேண்டும்.
செவிலியர் பணிக்கு வெளி மாநில மாணவர்கள் விண்ணப்பிக்காத வகையில் விதிமுறைகளை திருத்தி, புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு மட்டுமே செவிலியர் பணிக்கான விண்ணப்பங்களை வழங்கிட வேண்டும். தகுதி மற்றும் திறமையான புதுச்சேரி மாநில மாணவர்களை கொண்டே 225 செவிலியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.