/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மக்கள் நலன் காக்கும் அரசு அமைய இந்திய கம்யூ., தீர்மானம் மக்கள் நலன் காக்கும் அரசு அமைய இந்திய கம்யூ., தீர்மானம்
மக்கள் நலன் காக்கும் அரசு அமைய இந்திய கம்யூ., தீர்மானம்
மக்கள் நலன் காக்கும் அரசு அமைய இந்திய கம்யூ., தீர்மானம்
மக்கள் நலன் காக்கும் அரசு அமைய இந்திய கம்யூ., தீர்மானம்
ADDED : ஜூலை 10, 2024 04:28 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் மக்கள் நலன் காக்கும் அரசை அமைக்க தொடர்ந்து போராடுவது என, இந்திய கம்யூ., கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இந்திய கம்யூ., கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம், முதலியார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அமுதா தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் சலீம், அரசியல் மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில துணைச் செயலாளர் சேது செல்வம், தேசியக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, நிர்வாக குழு உறுப்பினர்கள் அந்தோணி, மதியழகன், வழக்கறிஞர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், லோக்சபா தேர்தல் தோல்வியால் என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணி அரசு ஆட்டம் காண்கிறது. மூன்று ஆண்டுகளாக மக்களுக்கு எதுவும் செய்யாததால், மக்களின் நம்பிக்கையை அரசு இழந்து விட்டது.
ஆகையால், எதிர்காலத்தில் மக்கள் விரோத என்.ஆர்.காங்., அரசை அகற்றி, மக்கள் நலன் காக்கும் அரசை அமைக்க தொடர்ந்து போராட வேண்டும்.
மக்களை பாதிக்கின்ற மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த வேண்டாம் என போராடும் புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு கட்சியின் நிர்வாக குழு ஆதரவு தெரிவிக்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.