/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிவன் கோவில் திருப்பணி அடிக்கல் நாட்டு விழா சிவன் கோவில் திருப்பணி அடிக்கல் நாட்டு விழா
சிவன் கோவில் திருப்பணி அடிக்கல் நாட்டு விழா
சிவன் கோவில் திருப்பணி அடிக்கல் நாட்டு விழா
சிவன் கோவில் திருப்பணி அடிக்கல் நாட்டு விழா
ADDED : ஜூன் 04, 2024 04:37 AM

வில்லியனுார் : பிள்ளையார்குப்பம் மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் ஆலய திருப்பணிக்கு அமைச்சர் சாய்சரவணன்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
ஊசுடு தொகுதி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் பழமைவாய்ந்த மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது. அப்பகுதியில் புதிய ஆலயம் அமைப்பற்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
விழாவில் சிவனடியார் நடராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை முதல் கால வேள்வி பூஜையும், நேற்று காலை இரண்டாம் கால வேள்வி மற்றும் பூஜைகள் நடந்தது.
விழாவில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய்சரவணன்குமார் பூமி பூஜை செய்து திருப்பணியை துவக்கிவைத்தார். இந்து சமய அறநிலைத்துறை செயலர் நெடுஞ்செழியன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் சிவசங்கரன், கிராம முக்கியஸ்தர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.