/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மரப்பாலம் - முருங்கப்பாக்கம் சாலை விரிவாக்கம் செய்ய நிலம் தர சம்மதம் சம்பத் எம்.எல்.ஏ., தலைமையிலான கூட்டத்தில் முடிவு மரப்பாலம் - முருங்கப்பாக்கம் சாலை விரிவாக்கம் செய்ய நிலம் தர சம்மதம் சம்பத் எம்.எல்.ஏ., தலைமையிலான கூட்டத்தில் முடிவு
மரப்பாலம் - முருங்கப்பாக்கம் சாலை விரிவாக்கம் செய்ய நிலம் தர சம்மதம் சம்பத் எம்.எல்.ஏ., தலைமையிலான கூட்டத்தில் முடிவு
மரப்பாலம் - முருங்கப்பாக்கம் சாலை விரிவாக்கம் செய்ய நிலம் தர சம்மதம் சம்பத் எம்.எல்.ஏ., தலைமையிலான கூட்டத்தில் முடிவு
மரப்பாலம் - முருங்கப்பாக்கம் சாலை விரிவாக்கம் செய்ய நிலம் தர சம்மதம் சம்பத் எம்.எல்.ஏ., தலைமையிலான கூட்டத்தில் முடிவு
ADDED : ஜூன் 04, 2024 04:35 AM

புதுச்சேரி, :மரப்பாலம் - முருகங்கப்பாக்கம் இடையிலான குறுகிய சாலை விரிவாக்கத்திற்கு 6 அடி நிலம் தர சம்பத் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த கூட்டத்தில், வணிகர்கள், பொதுமக்கள் சம்மதம் தெரிவித்தனர்.
புதுச்சேரி-கடலுார் சாலையில், மரப்பாலம் முதல் முருங்கபாக்கம் திரவுபதியம்மன் கோவில் வரை, சாலை அகலம் குறைந்து குறுகலாக உள்ளது. போக்குவரத்து மிகுந்த இச்சாலையில் சாலை குறுகலாக இருப்பதால் , தினசரி காலை 7:00 மணி முதல் இரவு 10 மணி வரை வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிதவிக்கும் நிலை உள்ளது.
இதனை போக்கும் விதமாக நாகமுத்துமாரியம்மன் கோவிலில் இருந்து முருங்கப்பாக்கம் பஸ் நிறுத்தம் வரையிலான சாலையின் இரு பக்கத்திலும் வசிக்கும் மக்கள் 10 அடி நிலத்தை சாலை விரிவாக்கத்திற்கு அளிக்க முன்வந்தனர். அப்போது, அரசிடம் நிதி இல்லாததால் நிலம் ஆர்ஜிதம் செய்யவில்லை.
நாகமுத்துமாரியம்மன் கோவில் முதல் திரவுபதியம்மன் கோவில் வரை நிலம் கையப்படுத்துதல் தொடர்பாக சம்பத் எம்.எல்.ஏ., தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்ற நடந்தது. சாலை விரிவாக்கம் செய்ய சாத்திய கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் வணிகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சாலையில் 6 அடிக்கு மேல்நிலம் ஆர்ஜிதம் செய்தால் இழப்பீடு வழங்க அரசிடம் நிதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.எனவே நாகமுத்துமாரியம்மன் கோவில் முதல் திரவுபதி அம்மன் கோவில் வரை சாலையின் இரு பக்கத்திலும் தலா 6 அடி நிலம் அரசு கையப்படுத்த ஒத்துழைப்பு அளிப்பதாக முடிவு செய்யப்பட்டது.
திட்டமிடல் வேண்டும்
சம்பத் எம்.எல்.ஏ., சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் தீவிரம் காட்டுவது வரவேற்க தக்கது. இன்னும் 10 ஆண்டுகள் கழித்து தற்போதுள்ள வாகனங்களை விட 2 மடங்கு எண்ணிக்கையிலான வாகனங்கள் பயணிக்கும். இதை கருத்தில்கொண்டு சாலையின் இரு பக்கத்திலும் தலா 10 அடிக்கு மேல் கையப்படுத்தி சாலையை விரிவாக்கம் செய்ய முன்வர வேண்டும்.