/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளி அருகில் அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கக் கோரிக்கை பள்ளி அருகில் அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கக் கோரிக்கை
பள்ளி அருகில் அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கக் கோரிக்கை
பள்ளி அருகில் அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கக் கோரிக்கை
பள்ளி அருகில் அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கக் கோரிக்கை
ADDED : ஜூன் 04, 2024 04:38 AM
நெட்டப்பாக்கம், : நெட்டப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி அருகில் இருந்த வேகத்தடைகளை அகற்றியதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து எதிரில் அரசு துவக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் அருகாமையில் பஸ் செல்லும் சாலையில் மாணவர்களின் நலன் கருதி வேகத்தடை அமைக்கப்பட்டது.
இவ்வாறு அமைக்கப்பட்ட வேகத்தடை மூலம் இவ்வழியாக வரும் பஸ், லாரி, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நின்று பிறகு சென்று வந்தது. இந்த வேகத்தடையை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி சிவன் கோவில் திருவிழாவிற்காக அகற்றப்பட்டது. மீண்டும் வேகத்தடை இதுவரை அமைக்கப்படாததால் இப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. இந்த வேகத்தடை அகற்றிய நாள் முதல் பள்ளி மாணவர்கள் திக் திக் என்று பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
எனவே பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அரசு துவக்கப் பள்ளி அருகில் அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க அரசு துாரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.