/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின் துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் மின் துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
மின் துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
மின் துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
மின் துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
ADDED : ஜூன் 19, 2024 11:26 PM

பாகூர் : மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி, பாகூர் மின் துறை அலுவலகத்தில், மா.கம்யூ., கட்சியினர் மின்சாதன வீட்டு உபயோக பொருட்களுடன் குடியேற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு கடந்த 16ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மின் கட்டண உயர்வை கண்டித்தும், திரும்ப பெறக்கோரியும், பாகூரில் அறிவிப்பு இன்றி ஏற்படும் மின்தடையை சரி செய்யக்கோரி, மா.கம்யூ கட்சி சார்பில், பாகூர் மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில், மாநில குழு உறுப்பினர்கள் இளவரசி, கலியன், விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவர் பத்மநாபன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் வடிவேலு, கலைச்செல்வன், ஹரிதாஸ், கவுசிகன், கிளை செயலாளர்கள் முருகையன், வெங்கடாசலம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஏ.சி., மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட மின் சாதன பொருட்களுடன், கடை தெருவிலிருந்து ஊர்வலமாக சென்ற மா.கம்யூ., கட்சியினர் பாகூரில் உள்ள மின் துறை அலுவலகத்தில் குடியேற முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் லேசாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையத்து, போராட்ட குழுவினர் மின் துறை அலுவலகம் எதிரே தரையில் அமர்ந்து, கோரிக்கைை வலியுருத்தி, மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். 10 பெண்கள் உள்ளிட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.