ADDED : ஜூலை 18, 2024 11:00 PM

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா தலைமை தாங்கினார். மருத்துவ கல்லுாரி இயக்குனர் டாக்டர் இரத்தினசாமி முன்னிலை வகித்தார். டாக்டர் சுரேந்தர், புதுச்சேரி அரசு மருத்துவமனை குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரிந்தா, புதுச்சேரி அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை தலைமை நிபுணர் டாக்டர் சித்தார்தன் ஆகியோர் புற்றுநோய் பரவல், பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்கள் மற்றும் புற்றுநோய் “360 டிகிரி” ஆகிய தலைப்புகளில் பேசினர்.
கருத்தரங்கில் மருத்துவ மாணவர்கள், செவிலியர் மாணவர்கள், பேராசிரியர்கள், இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை சமூக மருத்துவத்துறை தலைவர் டாக்டர் பரதலட்சுமி தலைமையில் மருத்துவ பேராசிரியர், துணை ஆசிரியர்கள், முதுகலை மாணவர்கள் செய்தனர்.