Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி டார்லிங் நிறுவனத்தில் ஓப்போ மொபைல் 'ரெனோ 12' அறிமுகம்

புதுச்சேரி டார்லிங் நிறுவனத்தில் ஓப்போ மொபைல் 'ரெனோ 12' அறிமுகம்

புதுச்சேரி டார்லிங் நிறுவனத்தில் ஓப்போ மொபைல் 'ரெனோ 12' அறிமுகம்

புதுச்சேரி டார்லிங் நிறுவனத்தில் ஓப்போ மொபைல் 'ரெனோ 12' அறிமுகம்

ADDED : ஜூலை 18, 2024 10:57 PM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரியில், 'ஓப்போ' மொபைலின் புதிய பிரீமியம் மொபைல் 'ரெனோ 12' அறிமுக விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தில் உள்ள டார்லிங் கிளையில், 'ஓப்போ' மொபைலின், புதிய பிரீமியம் மொபைல் 'ரெனோ 12' நேற்று முன்தினம் விற்பனைக்கு வந்தது.

ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இந்த மொபைலில், போட்டோ எடிட்டிங் செய்யும் வசதியுடன், குரலை பதிவு செய்து, அதை உரைநடையாக எழுத்து வடிவில் மாற்றும் வசதி உள்ளது.

மேலும், சிக்னல் இல்லாத இடத்தில், அருகில் உள்ள, மொபைல் போனின் சிக்னலை பயன்படுத்தி பிறருக்கு போன் செய்யும் புதிய அம்சத்தை உள்ளடக்கி வெளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் அறிமுக விழாவில், சின்னத்திரை பிரபலம் ஏஞ்சலின் பங்கேற்றார்.

வாடிக்கையாளர்களுக்கு புதிய ரெனோ ஸ்மார்ட் போன் வழங்கி விழாவை சிறப்பித்தார்.

இந்த மொபைல் போனை, 'டார்லிங்' கிளையில் வாங்கும் போது, ரூ.9999 மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச் இலவசமாக வழங்கப் படுகிறது.

மேலும் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு, ரூ. 4000 வரை கேஷ்பேக் வசதியும் வழங்கப்படுகிறது. இது குறுகிய கால சலுகை மட்டுமே.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us