/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரூ. 3.46 லட்சம் குட்கா பறிமுதல்; 2 பேர் கைது ரூ. 3.46 லட்சம் குட்கா பறிமுதல்; 2 பேர் கைது
ரூ. 3.46 லட்சம் குட்கா பறிமுதல்; 2 பேர் கைது
ரூ. 3.46 லட்சம் குட்கா பறிமுதல்; 2 பேர் கைது
ரூ. 3.46 லட்சம் குட்கா பறிமுதல்; 2 பேர் கைது
ADDED : மார் 13, 2025 06:49 AM
புதுச்சேரி: காரில் கடத்தி சென்ற ரூ.3.36 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
மாகி அருகே புகையிலை பொருட்களை கடத்தி செல்வதாக பள்ளூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, பள்ளூர் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில், விற்பனைக்காக காரில் எடுத்துச் செல்லப்பட்டது தெரிந்தது.
இதையடுத்து காரில் எடுத்துச் சென்ற பள்ளுர் பகுதியை சேர்ந்த நவ்ஷாத், 35, என்பவரை போலீசார் கைது செய்னர். 3.36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதே போல, செம்பரா பகுதியில் குட்கா, உள்ளிட்ட புகையிலை பொருட்களை வெளியிடங்களில் விற்பனை செய்த, ஹரிதாஸ், 36, என்பவரை போலீசார் கைது செய்து, 10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.