ADDED : மார் 13, 2025 06:50 AM

புதுச்சேரி: முதலியார்பேட்டை ஸ்டேட் பேங்க் கிளை சார்பில், சர்வதே மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. வங்கி கிளை மேலாளர் (பொ) மணிகண்டன் தலைமை தாங்கினார். வங்கி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மரக் கன்றுகள் வழங்கி மரம் வளர்ப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, வங்கியின் சேவைகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து, வாடிக்கையாளர்களுக்கு விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அலுவலர்கள் செல்லமாள், திவ்யா, ராமச்சந்திரன், மிசி மீனா, வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.