ADDED : மார் 13, 2025 06:49 AM
புதுச்சேரி: புதுச்சேரி அனைத்து மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் பாகூரில் நடந்தது.
மாநிலத் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
பொதுச் செயலாளர் சண்முகம், பொருளாளர் குருதேவ், துணை தலைவர் குமார், துணை செயலாளர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீதமும், கல்வி மற்றும் நலத்திட்டங்களில் 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பை முற்றிலும் நீக்கி அரசாணை வெளியிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.