/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 4 பேரிடம் ரூ.1.59 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை 4 பேரிடம் ரூ.1.59 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
4 பேரிடம் ரூ.1.59 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
4 பேரிடம் ரூ.1.59 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
4 பேரிடம் ரூ.1.59 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
ADDED : ஜூலை 14, 2024 10:57 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேரி டம் நுாதன முறையில் 1.59 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் கந்தன். இவரது வாட்ஸ் ஆப்பில் வந்த லிங்கை கிளிக் செய்து, வங்கி எண், கிரெடிட் கார்டு விபரங்களை பதிவு செய்தார். அதையடுத்து, அவரது வங்கி கணக்கில் இருந்து 1.28 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது.
அதே போல், முதலியார்பேட்டை ரத்தின சபாபதி என்பவரின் வங்கி கணக்கில் இருந்து 9 ஆயிரம், தட்டாஞ்சாவடி சதீஷ் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து 10 ஆயிரம், இந்திரா நகர் சையத் என்பவரின் கணக்கில் இருந்து 13 ஆயிரம் ரூபாயை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.