/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சகோதரர்களை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதிவு சகோதரர்களை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதிவு
சகோதரர்களை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதிவு
சகோதரர்களை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதிவு
சகோதரர்களை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூலை 14, 2024 10:57 PM
அரியாங்குப்பம்: முன்விரோத பிரச்னையில் சகோதரர்களை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
தேங்காய்த்திட்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில், 38; தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர்களுக்கிடையே சைடு வாய்க்காலில் கழிவுநீர் செல்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த, சந்திர சேகர், அவரது மனைவி இந்திரா, மருமகன் ராஜ்குமார் ஆகியோர் செந்தில், அவரது சகோதரர் ஆகியோரை தாக்கினர்.
படுகாயமடைந்த அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புகாரின் பேரில், சந்திர சேகர் உட்பட 3 பேர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.