நீர்தேக்கத் தொட்டி பராமரிப்பு பணி
நீர்தேக்கத் தொட்டி பராமரிப்பு பணி
நீர்தேக்கத் தொட்டி பராமரிப்பு பணி
ADDED : ஜூன் 17, 2024 12:45 AM

புதுச்சேரி : காலாப்பட்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் துர்நாற்றம் வீசியதாக எழுந்த புகாரை அடுத்து ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.
காலாப்பட்டு சுனாமி குயிருப்பு பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. தொட்டி சரியாக பராமரிப்பு இல்லாமல் மாசடைந்துள்ளது. அதனால், தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.,விடம் புகார் தெரிவித்தனர்.
அதையடுத்து, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து சுத்தமான குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க வலியுறுத்தினார்.
இந்நிலையில், குடிநீர் தொட்டியில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டு, ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் நேற்று ஈடுப்பட்டனர்.