ADDED : ஜூன் 17, 2024 12:44 AM
புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம் ஏரிக்கரை வீதியைச் சேர்ந்தவர் தேவநாதன், 45. இவர் நேற்று முன்தினம் மாலை மது குடித்துவிட்டு, உறுவையாறு - மங்கலம் சாலையில் அவ்வழியாக செல்வோர்களை பார்த்து ஆபாசமாக பேசி, தகராறில் ஈடுபட்டார்.
தகவலறிந்த மங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று, தேவநாதனை கைது செய்தனர்.